சாலைகளில் கால்நடைகளை சுற்றி திரியவிட்டால் 10 ஆயிரம் அபராதம் – திருச்சி மாநகராட்சி அறிவிப்பு!
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொது மக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து இதனை தடுக்கும் பொருட்டு கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை தங்களது வளாகத்திற்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்த்துக் கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

அவரில்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் தெருக்களிலும் சாலைகளிலும் சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி மூலம் பிடித்து செல்வதோடு முதன்முறையாக 10,000 அபராதம் மூன்று நாட்களுக்குள் செலுத்த சம்பந்தப்பட்ட கால்நடையின் உரிமையாளர் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக் கொள்ளவில்லை எனில் மாநகராட்சி அருகிலுள்ள கால்நடை சந்தை விற்பனை செய்து அதை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.