தங்கம் கடத்துவதாக தவறான தகவல் – சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் ஏமாற்றம்
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் பயணிகள் அனைவரையும் சோதனை செய்தனர்.
ஆனால் அந்த பயணிகளிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து விமானத்தினுள் பகுதிக்குள் நுழைந்த அதிகாரிகள் விமானத்தை சோதனை செய்தனர். அங்கு எந்தவிதமான தங்மும் கிடைக்காததால் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
