மணப்பாறைக்கு காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா பணிஇட மாற்றம் செய்யப்பட்டதாக சமூகவலைதளங்களில் பரவும் தவறான தகவல்
இசக்கிராஜா என்பவர் தென் மாவட்ட பகுதியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தனது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய ரவுடிகளை எச்சரித்து அவர்களுக்கு சவால் விடும் ஆடியோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் இவரது துணிச்சல் மற்றும் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் வேகமாகப் பரவி இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு ஹீரோவாக தெரிந்தார். அதனால் மாணவர்கள் மத்தியில பிரபலமடைந்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் இசக்கி ராஜாவால் மட்டுமே மணப்பாறை பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் இசக்கி ராஜா மணப்பாறைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் இசக்கி ராஜா புகைப்படத்துடனும் வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது.
இதனை உண்மை என நினைத்து பலரும் தங்கள் வாட்ஸ்அப் குரூப்புகளில் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் ரவுடிகளை ஒழிக்க மற்றும் திருட்டு சம்பவங்களை குறைக்கவும் மணப்பாறை காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டதாகவும் அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது அது உண்மையான தகவல் இல்லை. வதந்தி பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஆனால் சமீப காலங்களாக மணப்பாறை பகுதிகளில் நடைபொறும் குற்ற சம்பவங்களில் போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்காத தன் வெளிப்பாடே இந்த வாட்ஸ் வதந்தி எனவும் சமூக ஆர்வலர்களிடையே கருத்து நிலவி வருகிறது.