ரூ.5.88 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமிபூஜையை தொடங்கி வைத்த எம்எல்ஏ கதிரவன்
தத்தமங்கலத்தில் ரூ.5.88 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்க்கான பூமிபூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம் ஊராட்சியில் எதுமலை செல்லும் சாலையில் ரூபாய் 5.85 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை எம்எல்ஏ கதிரவன் தொடங்கி வைத்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம் ஊராட்சியில் எதுமலை செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் மூலம் ரூ.5.88 கோடி மதிப்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூமி பூஜையை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருச்சி நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் வடிவேல், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் VSP இளங்கோவன், முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் காட்டுக்குளம் கணேசன், மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் மனோகரன், மண்ணச்சநல்லூர் சேர்மன் ஸ்ரீதர், துணை சேர்மன் கேபிஎஸ் செந்தில், முசிறி துணை சேர்மன் ரமேஷ், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, தத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நித்திய வெற்றிச்செல்வன், மண்ணச்சநல்லூர் பேரூராட்சி தலைவர் சிவசண்முக குமார், சமயபுரம் பேரூராட்சி தலைவர் சரவணன் மாவட்ட பிரதிநிதி சார்லஸ், கூத்தூர் தலைவர் மணிகண்டன், வடக்கு மாவட்ட இளைஞர் அணி கவுண்டம்பட்டி ரவி, வடக்கு மாவட்ட இளைஞர் அணி மருதுசேகர், மண்ணச்சநல்லூர் தகவல் தொழில் நுட்ப அணி முருகானந்தம், சமயபுரம் வார்டு கவுன்சிலர் பிரதீப், மற்றும் இளைஞர் அணியினர் தகவல் தொழில்நுட்ப அணியினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்…