தீத்தடுப்பு பேரிடர் குறித்த போலி ஒத்திகை பயிற்சி

0 290
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூரில் உள்ள கோத்தாரி சர்க்கரை ஆலையில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீத்தடுப்பு, பேரிடர் குறித்த போலி ஒத்திகை பயிற்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

பணியின் போது உயிர் நீத்த வீரர்களின் நினைவு நாளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி தீத்தொண்டு நாள் வார விழா கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி அன்று பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் மலை வைத்து நினைவஞ்சலி செலுத்தினார் . அதனைத் தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெறும் இந்த தீ தொண்டு வார விழாவில் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு போலி ஒத்த்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் காட்டூரில் உள்ள கோத்தாரி சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் முன்னிலையில் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் அசோக், சசிகுமார்,சுரேஷ், பூமி ராஜன் ,விஜய் அமிர்தராஜ் ,மனோஜ் குமார் உள்ளிட்டவர்கள் தீத்தடுப்பு,பேரிடர் குறித்த போலி ஒத்திகை பயிற்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது மேலும் கோத்தாரி சர்க்கரை ஆலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு முன்னிலையில் தீத்தடுப்பு, தீயில் இருந்து பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது பேரிடர்களிலிருந்து எப்படி மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம் செய்து காட்டினார். இந்நிகழ்வில் கோத்தாரி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.