கோடைக் கால பயிர்களுக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
திருச்சி ஏப் 4 – கோடைக்கால பயிர்களுக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்
திருச்சி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு பேசும்போது உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து தரிசல் ஏற்படுகிறது அதனை கலைய அந்தப் பகுதி சாலையை விரிவு படுத்த வேண்டும்.
உறையூர் 11 வது வார்டு பெருமாள் கோவில் தெரு பகுதியில் கட்டி கட்டி முடிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை உடனடியாக திறக்க வேண்டும். கூத்தைப்பார் சமுத்தி குளத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் கோடைகால பயிர்களுக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
அரியமங்கலத்தை சேர்ந்த ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகி சம்சுதீன் உள்ளிட்டவிவசாயிகள் பலர்பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி பேசினார்கள்.