கொத்தமங்கலத்தில் மகனை கொன்று தாய் தற்கொலை!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொத்தமங்கலத்தில் மகனை கொன்று தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சி கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், கூலித்தொழிலாளி இவரது மனைவி 30 வயதான சரண்யா. இவர்களுக்கு ஒரு வயதில் தாஷ்விக் என்ற மகன் இருந்துள்ளார்.சரண்யா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தினேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு வெளியில் சென்று விட்டனர். அப்போது சரண்யாவும் அவரது ஒரு வயது மகனும் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் தினேஷ் குமார் மற்றும் அவர் குடும்பத்தினர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பின்னர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் சரண்யா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மகன் அருகே இறந்து கிடந்தார். மகனைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் லால்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.