எம்.பி. துரை வைகோ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

0 287
Stalin trichy visit

திருச்சி, ஆக.14 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற துறை வைகோ அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நடந்து முடிந்த பநாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுகவின் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற துரைவைகோ திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு, துவாக்குடி நகர் மன்ற தலைவர் மற்றும் துவாக்குடி நகரக் கழகச் செயலாளர் காயம்பு முன்னிலையில் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கூத்தைப்பார், பேரூர், துவாக்குடியில் பாரதிபுரம், கூத்தைபார், பேரூர், ஜெய்நகர், தேசிய தொழில் நுட்ப கல்லூரி, துவாக்குடி பேருந்து நிலையம் / மெயின் ரோடு, மாதா கோவில், மாரியம்மன் கோவில் தெரு, தேர்முட்டி, – கீழத்தெரு, ராவுத்தான் மேடு, – திருவள்ளுவர் நகர் இச்சி மரம் – பெல்நகர், பெல்நகர் கலைஞர் தெரு, (முன்னாள் ராணுவ காலனி), முத்துராமலிங்கம் சாலை, துவாக்குடி நகரம், அண்ணாநகர், செடிமலை முருகன் கோவில் தெரு, அண்ணா வளைவு, அண்ணா சாலை, அக்பர் சாலை, பெரியார் திடல், பாரதிதாசன் தெரு, ராஜீவ் காந்தி நகர், காமராஜர், பெரியார், வ.உ.சி, ஜீவானந்தம் தெரு, அம்பேத்கார் தெரு, வ.உ.சி நகர், அய்யனார் கோவில் தெரு, பெரியார் மணியம்மை நகர், இம்மானுவேல் தெரு, காமராஜபுரம் மற்றும் டவுன்சிப் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி, கூத்தப்பார் பேரூர் மன்ற தலைவர் செல்வராஜ், பேரூர்மன்ற துணைதலைவர் பழனியாண்டி, துவாக்குடி நகரமன்ற துணைத் தலைவர் லலிதாதேவி, கூத்தைப்பார் கழக நிர்வாகிகள் துவாக்குடிநகர நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டர்.
நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், உங்களைத் தேடி உங்களை நாடி நாங்கள் நன்றி சொல்ல இங்கே வருகை தந்து இருக்கின்றோம். தொடர்ந்து நம்முடைய திருச்சி நாடாளுமன்றம் என்று வரும் பொழுது ஆறு சட்டமன்ற தொகுதி உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்ற தொகுதி அதில் அதிகப்படியான வாக்கு வித்தியாசம் இந்த தொகுதி தந்தது என்று சொன்னால் நம்முடைய திருவெறும்பூர் தொகுதி தான் என்கின்ற அந்த பெருமை நான் சட்டமன்ற உறுப்பினராக 2021இல் நின்றபொழுது ஏறத்தாழ 49 ஆயிரத்து 676 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய திருவெறும்பூர் தொகுதி மட்டும் ஏறத்தாழ 69 ஆயிரத்து 867 கிட்டத்தட்ட 20,000 வாக்குகள் அதிகமாக நீங்கள் வழங்கி இருக்கின்றீர்கள் என்று சொல்லும் பொழுது நமது திராவிடம் மாடல் அரசை நடத்திக் கொண்டிருக்கின்ற நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சருடைய ஒவ்வொரு திட்டத்திற்கும் நீங்கள் தந்திருக்கின்ற அங்கீகாரமாக தான் இதை நாங்கள் பார்க்கின்றோம். துரை வைகோ எம்.பி. இந்த தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற என்னோடு சேர்ந்து என்னுடைய நிதியும் அவருடைய நாடாளுமன்ற நிதியில் இருந்து பல்வேறு மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அவரும் இன்றைக்கு தயாராக இருக்கின்றார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு நாடாளுமன்றத்திற்கு சென்று ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேலாக நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமான கேள்விகளை எழுப்புவதாக இருந்தாலும் சரி, தன்னுடைய கருத்துக்களை பதிய வைப்பதாக இருந்தாலும் சரி எப்படி அண்ணன் வைகோ தொடர்ந்து கர்சித்துக்கொண்டிருக்கின்றாரோ, அதேபோன்று இன்றைக்கு அவருடைய பிள்ளை தன்னுடைய தந்தையை போல எடுத்த காரியத்தை முடிக்கின்ற வரைக்கும் அதை ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நல்ல இளைஞராக படித்த பண்பாளராக நமக்கு கிடைத்த எம்பி தான் நமது துரை வைகோவிற்கும், அந்த விதத்தில் உங்களை தேடி உங்களை நாடி நான் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் மட்டுமல்ல அவரும் அந்த நன்றியை மறவாமல் உங்களோடு சேர்ந்து உங்களுக்காக பணியாற்றதற்கு நான் காத்துக் கொண்டிருக்கின்றேன் என்கின்ற அந்த உணர்வோடு இன்றைக்கு உங்களை தேடி வந்திருக்கின்றார்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கூறுகையில், இந்தியா கூட்டணி மிகப்பெரிய இமாலய வெற்றி ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றியை நாம் பெற்று இருக்கின்றோம். அந்த வெற்றிக்கு வித்திட்டவர்கள் இருவர் ஒருவர் நம்முடைய மூத்த அமைச்சர் நேரு, மற்றொருவர் என் உடன்பிறவா சகோதரர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சரைவிட நான் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கேன் என்று அதற்கு காரணம் முதலமைச்சரின் மக்கள் நலப் பணிகள் நமது அமைச்சர் மகேஸ் பொய்யாமொழியின் சிறப்பான பணி அவர் சார்ந்திருக்கின்ற பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புரட்சியாளராக செயல்பட்டு இருக்கிறார். காலை சிற்றுண்டி உணவு திட்டம் இந்தியாவிற்கு பிற மாநிலங்களின் மற்றும் கனடா போன்ற உலக நாடுகளுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகின்றனர். சிறந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர், சிறந்த சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அவரின் தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களையும் இது நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக நான் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவேன். நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாய் ஒலித்து வருகிறேன். நீங்க ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறீங்க இந்த வெற்றிக்கு எங்களுடைய இயக்கத்தின் சார்பாக எங்கள் இயக்கத்தில் இருந்த தலைவர் வைகோவின் சார்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனின் சார்பாக உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.