திருச்சி விமான நிலையத்தில் ஒன்றரை கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி, ஆக. 14 திருச்சி விமான நிலையத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 2291 ( 2.2கிலோ ) கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அதில் வந்த பெண் பயணி ஒருவர் சந்தேகத்துக்கிடமாக இருந்த நிலையில் அவர் உடமைகளை சோதனை செய்தனர் அப்போது அதில் செயின் மோதிரம் பிரேஸ்லெட் வளையல் என 2291 ( 2.2கிலோ) கிராம் 24 கேரட் மற்றும் 22 கேரட் கடத்தல் தங்கம் இருந்தது தெரிய வந்தது இதை எடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பெண் பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தங்கத்தின் மதிப்பு ஒரு கோடியே 53 லட்சம் ரூபாய் என என தெரிவிக்கப்பட்டுள்ளது.