சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

0 834
Stalin trichy visit

 

திருச்சி, நவ. 23  திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே மேலவாளாடி. மேம்பாலத்தில் மோட்டார் பைக்கில் சென்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

லால்குடி அருகே வாளாடி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிராஜுதீன். இவரது மகன் சதாம் உசேன்(20). இவர் கேட்டரிங் சர்வீஸ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் தனது மோட்டார் பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து வாளாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு பலத்த ரத்தக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதா அல்லது மேம்பாலம் கட்டையில் தானாக மோதி விபத்து ஏற்பட்டதா விபத்து எப்படி ஏற்பட்டது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.