முசிறி அருகே மது விற்றவர் கைது

0 356
Stalin trichy visit

முசிறி அருகே தும்பலம் காட்டு மாரியம்மன் கோவில் அருகே மது விற்ற ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தும்பலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காட்டு மாரியம்மன் கோவில் அருகே அரசு மதுபானங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்றவரை கைது செய்தார். விசாரணையில் அவர் தும்பலம் கிழக்கு தெருவை சேர்ந்த இளங்கோவன் ( 39 ) என்பது தெரிய வந்தது . மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.