வேகத்தடையில் தடுமாறி விழுந்த ஊராட்சி செயலர் சிகிச்சை பலனின்றி  உயிரிழப்பு

0 611
Stalin trichy visit

முசிறி நகராட்சி குப்பை கிடங்கு அருகில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் நிலை தடுமாறி விழுந்த ஊராட்சி செயலர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா சின்னக்
கொடுந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை ( 55 ) . இவர் அய்யம்பாளையம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 4ம்தேதி முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்துவிட்டு பைக்கில் மீண்டும் திரும்பி செல்லும் பொழுது முசிறி நகராட்சி குப்பை கிடங்கு அருகில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன்  108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இச்சம்பவம் குறித்து சின்னத்துரையின் மனைவி அமுதா புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிந்து சின்னத்துரை உடலை உடற்கூறு பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.