முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!

0 322
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி சென்னையில் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் வழங்குகிறார். இதில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்-பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதியாண்டில் 1.4.2021முதல் 31.3.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். இந்த விருது ரூ.1 லட்சம் , பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த விருது பெற குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருத்தல் வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய,

மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதிற்கு விண்ணபிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 10.05.2022 அன்று மாலை 4.00 மணிக்கு கடைசி நாளாகும். இதற்கான விண்ணப்பத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அண்ணா விளையாட்டரங்கம் திருச்சி என்ற முகவரியில் உள்ள தொலைபேசி எண் 0431-2420685 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.