மாயமான வாலிபர் வாய்க்காலில் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தகுடியை சேர்ந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமான நிலையில் புள்ளம்பாடி வாய்க்காலில் அழுகிய நிலையில் சடலமாக போலீசார் மீட்டனர்.
உளுந்தகுடியைச் சேர்ந்தவர் குமார்.இவரது மகன் 27 வயதான அமாவாசை. இவர் பெயிண்டர் ஆக வேலை செய்து வருகிறார் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அமாவாசை கிடைக்கவில்லை. இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 4 ம் தேதி அவரது அண்ணன் ராஜா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அங்குள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் உடல் அழுகிய நிலையில் அமாவாசை சடலமாக கிடப்பதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அமாவாசை மதுபோதையில் வாய்க்களில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்தனர்