அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உபகரண பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்

0 332
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளி உபகரண பொருட்களை எம்எல்ஏ வழங்கினார்.

‌பெருவளப்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளி உபகரண பொருட்கள் லால்குடி எம்.எல். ஏ. சௌந்தர பாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் புள்ளம்பாடி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி_ரசியா கோல்டன் ராஜேந்திரன்,பெருவளப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் , பெருவளப்பூர் ஒன்றிய கவுன்சிலர் குணவதி மதியழகன் ,சிறுகளப்பூர் ஊராட்சி மன்ற தலைவர், PK அகரம் ஊராட்சி மன்ற தலைவர், K.K நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர், ex ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.