திருச்சி ந.குட்டப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு காமராஜர், அன்னை தெரசா, பெரியார் போன்ற தலைவர்களின் படங்கள் வழங்கப்பட்டன!

0 647
Stalin trichy visit

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியை அரசு கல்லூரி மற்றும் 10 அரசு பள்ளிகளுக்கு முத்து உடையார் டிரஸ்ட் சார்பாக காமராஜர், அன்னை தெரேசா, பெரியார் போன்ற தலைவர்களின் படங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கருப்பையா, ந.குட்டப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், முத்து உடையார் டிரஸ்ட் நிறுவனர் செல்வம், பாகனூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனர் செல்வம் கூறுகையில்…”தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரது பெயரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு மூலம் அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு தலைவர்களின் படங்கள் வழங்கவுள்ளோம். முதல் படியாக எங்களது ஊரின் சுற்று வட்டாரத்தில் உள்ள 10 அரசு பள்ளிகளுக்கும், பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியாகும் வழங்கினோம். எனது தந்தையின் நினைவு நாள் அன்று 100 மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.