திருச்சியில் நாளை (11/09/2021) தேசிய மக்கள் நீதிமன்றம்!

0 452
Stalin trichy visit

டெல்லி தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவுப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற உள்ளது.

இது குறித்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிளாஸ்டேன் பிளஸ்ட் தாகூர் அறிக்கையில் கூறியிருப்பதாவது… “திருச்சி நீதிமன்றங்களில் 5 மக்கள் நீதிமன்றம் அமர்வுகளும் லால்குடி, மணப்பாறை, துறையூர், ஸ்ரீரங்கம் 1 மக்கள் நீதிமன்றம் அமர்வுகளும் என மொத்தம் 10 அமர்வுகளில் வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து சமரச முறையில் பேசி வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும். மொத்தம் 13 ஆயிரத்து 375 வழக்குகளுக்கு மேல் சமரச முறையில் தீர்வு காண பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது”. என தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.