தேசிய கண் தானம் விழிப்புணர்வு பேரணி
திருச்சி, செப்.8 கண் தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு போதிய கண்களை தானமாக பெறமுடியாதநிலை உள்ளதால் 1985 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை இருவாரம் கண்தான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி கிஆபெ அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை சார்பில் தேசிய கண் தானம் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
கண்களை தானம் செய்யும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் ஹீரோதான் என்ற முழக்கத்துடன் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நூற்றுக்கு மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து நீதிமன்றம் வரையிலும் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்