தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு
காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி (மேற்கு) வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல நிகழாண்டு செப்டம்பர் 12ம் தேதி காட்டுப்புத்தூரில் மேற்குப் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் அலுவலர்கள் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதி அங்கன்வாடி பணியாளர்கள் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
அப்போது தாய்மார்கள், வளர் இளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமினை முன்னதாக காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தொடங்கி வைத்தார்.