புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

0 313
Stalin trichy visit

சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று (10.04.2023)   திருச்சிராப்பள்ளி மாவட்டம் இருங்களூர் திட்டப் பகுதியில்  தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள  புதிய  அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்தார்கள். இருங்களூரில், நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளையும் கிரையப் பத்திரங்களையும் வழங்கினார். இந்நிகழ்வில், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு. வைத்தியநாதன். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளர் இளம்பரிதி, உதவி நிர்வாக பொறியாளர் முருகானந்தம், இருங்களூர்  ஊராட்சி மன்ற தலைவர் திரு. வின்சென்ட் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள், கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.