தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 314
Stalin trichy visit

தி.மு.கவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமினை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்…

திருச்சி, ஏப்.3 திமுகவில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி இருந்தார்.
அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது, இதில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார். இதில் புதிதாக பதிவு செய்ய வந்தவர்கள் பெயர், முகவரி, விவரம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஆகியவற்றின் ஜெராக்ஸ் இணைத்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து திமுகவில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது..

இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர மேயர் அன்பழகன், தொகுதி பொறுப்பாளர்களான செந்தில், சந்திரசேகர், உத்திராபதி, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் போட்டோ கமால்,மோகன் தாஸ், நாகராஜ், ராம்குமார், மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Leave A Reply

Your email address will not be published.