புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்
திருச்சி, நவ. 30 திருச்சி மாவட்டம் ஆங்கரையில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்டச் செயலாளர் தினகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் இளைஞரணி விஜய.பிரபு வரவேற்புரையாற்றினார்.லால்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்
அரசகுமார், லால்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் முன்னிலை வகித்தனர்.
.மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வாழையூர் குணா சிறப்புரையாற்றினார்.
இந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
1. டிசம்பர் 15 இராமநாதபுரத்தில் நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் 27 ஆம் ஆண்டு பூரண மது ஒழிப்பு மாநாட்டில் அனைத்து ஒன்றியங்களில் இருந்து 5 வாகனங்களில் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
2. மாநாட்டு பங்களிப்பாக ரூ.50 ஆயிரம் திருச்சி வடக்கு மாவட்டத்தின் சார்பாக நிதி பங்கீடு வழங்கிட வேண்டுமென தீர்மானிக்கப்படுகிறது.
3. 27ஆம் ஆண்டு மாநாட்டு அழைப்பிதழ்,
மாநாட்டு சுவரொட்டி, துண்டறிக்கை விநியோகம் அனைத்து கிராமங்களிலும் , வீடு தோறும் வழங்கிட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
4. தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எதிராக நடைபெறும் சாதி ரீதியான படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த கையாலாகாத மற்றும் கொலை குற்றவாளிகளை மென்மையாக கையாளும்
செயல்பாடற்ற திமுக அரசை திருச்சி வடக்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் தயாநிதி, மாதேஷ் மற்றும் பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.
இறுதியாக லால்குடி நகர செயலாளர் சிவகுமார் நன்றியுரையாற்றினார்.