மார்ச்.29, யூபிஐ பரிவர்த்தனைக்கோ, வேலட் பரிவர்த்தனைக்கோ கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என பேடிஎம் விளக்கம் தெரிவித்துள்ளது.
சற்றுமுன்னர், ஏப்ரல் 1 முதல் ரூ.2,000 பரிவர்த்தனைக்கு 1.1% கட்டணம் என தகவல் வெளியான நிலையில், பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது.
பேடிஎம் UPI பரிவர்த்தனைகள் வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் UPI பரிவர்த்தனைகள் இலவசம் என்றும், எந்த விதமான கூடுதல் கட்டணமும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை எனவும் பேடிஎம் (Paytm) நிறுவனம் அறிவித்துள்ளது.