ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

0 277
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஏதோ ஒரு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

லால்குடி கீழ வீதியைச் சேர்ந்தவர் 42 வயதான அசோக்குமார்.இவர் கடந்த மூன்று மாதமாக சற்று மனநலம் பாதித்து சுற்றி திரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி மற்றும் அண்ணன் குடும்பத்தினர்கள் அனைவரும் திருச்சியில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவிற்கு சென்று விட்டனர். இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தவர் லால்குடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது லாயில்குடி ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஏதோ ஒரு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.