கல்லணை அருகே சாலை விபத்தில் – ஒருவர் பலி : 3 பேர் படுகாயம்

0 460
Stalin trichy visit

திருச்சி கல்லணை அருகே உள்ள கவுத்தரசநல்லூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் டேங்கர் லாரியில் சிக்கி ஒருவர் பறிதாபமாக உயிரிழந்தார் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்..

திருவானைக்கோவில் அருகே உள்ள உத்தமர்சீலி சேர்ந்த சங்கிலி மகன் வீரமணி (42) மகாமணி மகன் வீரமணி (40), குமார் (50) ஆகிய மூன்று பேரும் கல்லணைக்குச் சென்று விட்டு கல்லணை திருவனைகோவில் சாலையில் வீட்டிற்கு செல்வதற்காக கவுத்தரசநல்லூர் பகுதியில் பைக்கில் வந்த பொழுது திருச்சியில் இருந்து வந்த பைக் நேருக்கு நேர் மோதியது.

இதில் நிலைதடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனர்.

அப்பொழுது கல்லணை பகுதியில் இருந்து திருச்சி பகுதிக்கு பெட்ரோல் டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி வீரமணி தலையில் ஏறியது இதில் சம்பவ இடத்திலேயே வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் வீரமணி, குமார் மற்றும் எதிர் பைக்கில் வந்தவர் என 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து நம்பர் 1 டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.