தொடர் விடுமுறையையொட்டி 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0 402
Stalin trichy visit

தொடர் விடுமுறையையொட்டி 300 சிறப்புபேருந்துகள் இயக்கம்
அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல்
திருச்சி, செப்.26 தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் லிட் சார்பில் வருகிற 30 மற்றும் 1- ஆம் தேதி (சனி, ஞாயிறு) வாரவிடுமுறை, 28- ஆம் தேதி மிலாடிநபி, 2- ஆம் தேதி காந்திஜெயந்தி என தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்களும் என கூடுதலாக 27, 28, 29 மற்றும் 30-ந் தேதிகளில் மொத்தம் 300 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
அதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்ல 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும், இயக்கப்படுகிறது.
விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல 2, 3- ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
வரும் 27, 28, 29, 30 ஆம் தேதிகளில் தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக முன்னதாகவே முன்பதிவு செய்துபயணிக்க வேண்டும். முன்பதிவு செய்வதற்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். முன்பதிவு செய்வதன் மூலம் தேவையை கணித்து அதற்கேற்ப பேருந்து சேவை அளிக்கப்படும். எனவே, பயணிகள் www.tnstc.in இணையமுகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும். முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.