பாட்னா பைரேட்ஸ் கபடி அணியில் விளையாட தேர்வான பாளைய நல்லூர் கிராம இளைஞர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தேசிய அளவில் நடைபெறும் புரோ கபடி சீசன் 10 பாட்னா பைரேட்ஸ் அணியில் விளையாட தேர்வாகியுள்ளார்.
மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து கண்ணகி தம்பதியினர். இவருடைய மகன் 25 வயதான சுதாகர். இவருக்கு சிறு வயது முதல் கபடி விளையாட்டின் மேல் ஆர்வம் இருந்ததால் கபடி விளையாட்டை கற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று போட்டியில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். இந்நிலையில் தேசிய அளவில் நடைபெறும் ப்ரோ கபடி சீசன் 10 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பாட்னா பைரேட்ஸ் அணியில் விளையாட மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞர் தேர்வாகி தேசிய அளவில் நடைபெறும் கபடி போட்டியில் விளையாட உள்ளார்.பாட்னா பைரேட்ஸ் அணியில் விளையாட தேர்வான சுதாகருக்கு அப்பகுதியினர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.