கோவில் மரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள முப்புளியான் கோவில் வாளாகத்தின் ஒரு பகுதியில் புளியமரத்தில் இன்று ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். மேலும் இதுபற்றி வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் குதிரைகுத்திப்பட்டியை சேர்ந்த செல்லத்துரை (47) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஒரு பேப்பரில் நியாயம் இல்லை, நீதி இல்லை, இந்த முப்புளியான் கும்பிட்டும் எங்கள் குலம் அழிந்தது. ஆகையால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. ஆகையால் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த ஒரு ஆண்டிற்கு முன் மகன் தற்கொலை செய்து கொண்ட வேதனையில் செல்லதுரை இருந்ததாக கூறப்படுகிறது.