கிராம நிர்வாக அலுவலரை தாகாதவாறு திட்டிய ஊராட்சி மன்ற துணைத் தலைவர்-வைரலாகும் வீடியோ..
கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி தகராறில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சுரேஷ்குமார் – இவர் நேற்று சனிகிழமை புதிய வாக்காளர் சேர்க்கும் தனது பணியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்புகையில் இவர் எதிரே வந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன் என்பவர் நடுவெளியில் கிராம நிர்வாக அலுவலர் இடைமறித்து தகராறில் ஈடுபட்டார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி கிராம நிர்வாக அலுவலரை தகாதவாறு திட்டியதாக தெரிகிறது – இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.