திருச்சி தெற்கு மாவட்டத்தின் கழக பொது உறுப்பினர் கூட்டம்…
திருச்சி ஆனந்தா அவென்யூ, EB.சாலையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற முதல் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அன்பில் தர்மலிங்கம் வழியில் திருச்சியில் கழகம் காத்த
முன்னாள் மாவட்ட செயலாளர்களின் குடும்பத்தினரை கெளரவித்தார்கள் . திருச்சி(தெ) மாவட்ட கழக அவைத்தலைவர் என்.கோவிந்தராஜ் தலைமையில், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர்- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
முன்னிலையில் மாவட்டத்தின் முதல் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
விழாவில் தொடக்கமாக கழக இறுவற்ண கொடியை ஏற்றி வைத்து மாவட்ட கழக நிர்வாகிகளின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து கழகத்தின் மூத்த முன்னோடிகளான தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அன்பிலார் ஆகியோரின் திரு உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அறிமுகவுரை நிகழ்த்திய இந்நிகழ்வில் மாநகர கிழக்கு கழக செயலாளர் மு.மதிவாணன் நன்றியுரை நிகழ்த்தினார். தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், அணி அமைப்பாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டார்கள்.

திருச்சி தெற்கு மாவட் ட உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் ஒன்று
பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் இலட்சியங்களை இதயத்தில் ஏற்று திராவிட மாடல் ஆட்சி நடத்தும், திராவிடத்தின் திருவிளக்கு, எங்கள் குலவிளக்கு தளபதியின் அறிவு இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த கழகத்தின் பொதுக்குழுவுக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம்- 2.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், எங்களது ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் செயலாளராக பணியாற்றிய கே.என். நேருவை மீண்டும் முதன்மை செயலாளராக நியமனம் செய்த, தமிழக முதல்வர், கழகத்தலைவருக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நன்றி! நன்றி! நன்றி!
தீர்மானம்-3
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக, மிகச்சிறப்பாக பணியாற்றிய அன்பில்.மகேஸ் பொய்யாமொழியை , திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயலாளராக தேர்வு செய்த கழகத் தலைவருக்கும், திருச்சி தெற்கு மாவட்டத்தின் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும். இந்த மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம், இதயாமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்-4
இளைஞர்களின் எழு ஞாயிறு, தமிழகத்தின் எதிர்காலம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர். கழகக்கின் இளைஞர் அணி செயலர் உதயநிதி ஸ்டாலின், பிறந்த நாளான நவம்பர் 27, அன்று திருச்சி தெற்கு மாவட்டத்தின் மாநகர ஒன்றிய நகர, பகுதி, பேரூர் பகுதிகளில் கழக கொடியினை ஏற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்பாக கொண்டாடுவது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம்-5
2024ல் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு40 தொகுதிகளை வென்றெடுப்போம் என்று, கழகத்தலைவர் பொதுக்குழுவில் பிரகடனம் செய்ததை நிறைவேற்றும் வகையில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள், மற்றும் BLA2 வையும் தலைமைக்கழகத்தின் வழிகாட்டுதலின் படி நியமித்து கழகத்தின் வெற்றிக்கு வழி வகுத்திட பணியாற்றுவோம், வெற்றிபெறுவோம் என்று இக்கூட்டப் உறுதி ஏற்கிறது.