திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புத்தாநத்தம் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் வெங்கட்ராமன். இவர் புத்தாநத்தத்தைச் சேர்ந்த ஆஸ்மாபேகம் என்ற ஒப்பந்தக்காரரின் கணவர் முகமது
இஸ்மாயில் என்பவரிடம் ரூ.6000 லஞ்சம் பெற்றபோது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ஊராட்சியில் பைப் லைன் அமைத்து மற்றும் சாக்கடை வாய்க்கால் அமைத்த பணிகளுக்காக காசோலை வழங்க ரூ.6000 பணம் கேட்டதாகவும் அதனை கொடுக்க விருப்பமில்லாததால் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் இன்று மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து இஸ்மாயில் பணம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து வெங்கட்ராமனை கைது செய்தனர்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.