போக்குவரத்து சிக்னலை கடைபிடிக்காததால் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்!
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் இன்று மதியம் போக்குவரத்து சிக்னல் விழுந்த பிறகு சாலையை கடக்க முயன்ற 2 இருசக்கர வாகன ஓட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி கீழே விழுந்தனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வாகன ஓட்டுனர்களுக்கு எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அவற்றை பொருட்படுத்தாமல் அவர்கள் நடந்து கொள்வதினால் விபத்துகள் அதிகரித்துவருகிறது. விபத்தை தவிர்க வேண்டும் என்றால், வாகன ஓட்டிகள் சாலை சிக்னல் மற்றும் குறியீடுகள் பற்றிய அறிவைக் கொண்டிருப்பதோடு அவற்றை பின்பற்றுதல் வேண்டும். வாகனத்தை அதிவேகமாக செலுத்தக் கூடாது. இரு வழி நெடுஞ்சாலைகளில் இடது பக்கமாக வாகனத்தைச் செலுத்த வேண்டும். சந்திப்புகளில், பாதை மாறுகையில் வாகனத்தின் வேகத்தை

குறைக்க வேண்டும். போதையில் வண்டி ஓட்டக் கூடாது. தொலைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் செலுத்தக் கூடாது. வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை செலுத்தல் கூடாது. வாகனத்திலிருந்து வெளியே தலையை நீட்டக் கூடாது. பாதையில் துப்பவோ, குப்பைகளை வீசவோ கூடாது. மருத்துவ அவசர ஊர்திக்கு (Ambulance) வழி விட வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் வாகன ஒலி எழுப்பியை (Horn) பயன்படுத்தல். பொது வாகனத்தில் ஓட்டுனர் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்வதைத் தவிர்க்க வேண்டும். அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.