மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா; திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்!

0 420
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், தங்கநகரில் உள்ள பெரிய மாரியம்மன், தங்கநகரையொட்டியுள்ள குண்டுக்கல் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், கரும்பாலை தொட்டி ஆகியன நடைபெற்றன. பிள்ளை வரம் வேண்டுபவர்கள் கரும்புகளில் தொட்டில் கட்டி தூக்கிச் செல்வது இங்கு சிறப்பு. குழந்தை பிறந்தவுடன் கரும்புகளில் தொட்டில் கட்டி குழந்தையை படுக்க வைத்து கணவனும் மனைவியும் தூக்கிச் சென்று நேர்த்திக்கடன் செய்வது இங்கு மரபாகும். குண்டுக்கல் சின்ன மாரியம்மன் கோவில் முன்பு 3 அடி அகலம் 3 அடி ஆழம்

 

16 அடி நீளத்திற்கு குழி வெட்டி, காலை வேளையில் பூஜைகளுடன் தீக்குண்டம் பற்ற வைக்கப்பட்டது. மாலை தீ குண்டத்தில் 9 பெண்கள் ஒருவர் பின் ஒருவராக தீ குண்டத்தில் இறங்கி சென்று, நேர்த்திக்கடன்களை முடித்து அம்மனை வழிபாடு செய்தனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். திருவிழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உப்பிலியபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியமணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.