திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி மாவட்டத்திலிருந்து உக்ரைன் நாட்டிற்கு கல்வி, வேலை மற்றும் இதர காரணங்களுக்காக சென்றுள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏதுவாக உக்ரைனில் வசித்து வரும் நபர்களின் உறவினர்கள் தேவையான விவரங்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரில் அல்லது collrtry@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம். 0431-2461243 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
உக்ரைனில் வசித்து வரும் நபர்களின் பாஸ்போர்ட் எண், இருப்பிட முகவரி, கல்லூரி முகவரி, உக்ரைன் நாட்டில் உபயோகித்து வரும் அலைபேசி எண், தமிழகத்தில் வசிப்பிட முகவரி, அலைபேசி எண், உக்ரைன் நாட்டில் மாணவர் அல்லது பணியில் உள்ளவர் அல்லது இதர காரணங்களுக்காக குடியேறியவர் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.
மேலும் மாநில அவசர கட்டுப்பாட்டு மைய எண் 1070, அயலகத்தமிழர் நலன் மற்றம் மறுவாழ்வு ஆணையரக கமிஷனர் 94458-69848, 96000-23645, 99402-56444, 044-28515288, உக்ரைன் அவசர உதவி மையம், தமிழக பொதிகை இல்லம், புது தில்லி. வாட்ஸ்அப் எண் 92895-16716, இ-மெயில் முகவரி Ukrainetamils@gmail.com ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.