மாற்றுத்திறனாளிகளுக்கான குறுகிய கால பயிற்சி; பயன்பெற அழைப்பு!
திருச்சி தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவன இயக்குனர் ராம்கணேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஐ.ஈ.சி.டி.யானது மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக அலுவலக தன்னியமாக்கல் என்ற குறுகிய கால பயிற்சியை இலவசமாக நடத்த திட்டமிட்டுள்ளது. வருகிற 14ம்தேதி முதல் 18ம்தேதி வரை நடைபெற உள்ள இந்த பயிற்சிக்கு சேர்க்கைக்கட்டணம் அல்லது பதிவுக்கட்டணம் ஏதும் கிடையாது.
100 சதவீதம் உதவித்தொகையுடன் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. ஆர்வம் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களின் கல்வித்தகுதி, வயது, முகவரி, தொலைபேசி எண், மின்அஞ்சல் முகவரி மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் சான்றிதழின் நகல் போன்றவற்றை வெள்ளி தாளில் குறித்து தங்கள் கோரிக்கையை இயக்குனர், தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகம், திருச்சி, என்ற முகவரிக்கு வருகிற 10ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.