சுற்றுச்சூழல் காக்க கோலமிட்டு புத்தாண்டை வரவேற்ற மக்கள் சக்தி இயக்கம்

0 100
Stalin trichy visit

திருச்சி, ஜன.1  சுற்றுச்சூழல் காக்க கோலமிட்டு புத்தாண்டை வரவேற்ற மக்கள் சக்தி இயக்கம்

புத்தாண்டு 2026-ஐ முன்னிட்டு,சுற்றுச்சூழல் பாதுகாப்பும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மக்கள் சக்தி இயக்கம் சார்பில் “பிளாஸ்டிக் தவிர்ப்போம் – துணிப்பை எடுப்போம்” என்ற வாசகத்துடன் கோலம் வரையப்பட்டது.
ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை தவிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த புத்தாண்டு வாழ்த்து கோலம் அமைக்கப்பட்டது.
பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வரையப்பட்ட இந்த கோலம், புதிய ஆண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற செய்தியை எடுத்துரைக்கிறது.
மக்கள் சக்தி இயக்கத்தின் இந்த முயற்சி சமூகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பாராட்டத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.