அமைச்சர் கே.என்.நேருவிடம் அர்ச்சகர்கள், பட்டர்கள் கோரிக்கை மனு

0 470
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருவெள்ளறை, உறையூர், அன்பில் பெருமாள் கோவில்களில் பணிபுரியும் பட்டர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளும் தொடர்ந்த அதே கோவில்களில் கைங்கரியங்கள் செய்வதற்கு எவ்வித பாதகமும் இல்லாமலும், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரி 300க்கும் மேற்பட்ட பட்டர்கள் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் முன்பாக
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு அளித்தனர்.
அவர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

இதுகுறித்து அர்ச்சகர்கள் கூறுகையில், பூஜை வழிபாடுகளை அனைத்து கோவில்களிலும் முறையாக செய்து கொண்டிருக்கின்றோம். வழிபாடு, பூஜைகள் தொடர்ந்து நடத்துவதால் இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் எல்லாவிதமான வளங்களும், நலங்களும் கிடைக்க வேண்டும் என்று அனுதினமும் இந்த (பிராமண) சமூகத்தை சார்ந்தவர்கள் வழிபாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுக்கும் எல்லாவித நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும் என “சர்வே ஜனா சுகினோ பவந்து என்று வேதம் குறிப்பிடுவது போல எல்லா மக்களுக்காக பாடுபடக்கூடிய எங்களுக்கு எங்களுடைய பூஜை வாழ்வாதாரத்தை தவிர மற்ற எந்த அரசு ஊழியர்களின் ஊதியம் வழங்கப்படுவதில்லை.

பூஜை ஒன்றை உயிர்மூச்சாக கருதி எங்களுடைய இறுதி காலம் வரை அந்த வழிபாட்டை செய்து கொண்டிருக்கின்றோம். அதற்கு இடையூறு இல்லாமல் எல்லாவிதமான ஆலயங்களிலும் ஆண்டாண்டு கால வழக்கப்படி வழிபாடு நடத்த அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சுந்தர் பட்டர், நந்தகுமார் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.