ஊ.ம. தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் மனு!

0 625
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் வந்த சிலர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் மருங்காப்புரி தாலுகா பில்லுப்பட்டி கிராமம் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர், சின்னக் காளை. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சார்ந்தவர். கடந்த 03.08.2021 அன்று அவரது அண்ணன் பெருமாள் மனைவி களஞ்சியம் அவர்களை அதே ஊரைச் சார்ந்த மாற்றுச் சமுதாயத்தினரான IAS அழகர் சாமியும், அவரது குடும்பத்தினரும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். துவரங்குறிச்சி காவல் நிலைய அதிகாரிகள் பெருமாள் மனைவி களஞ்சியம் இறப்பு சந்தேக மரணம் என

வழக்குப் பதிவு செய்துவிட்டார்கள். இதனை ஏற்க மறுத்து அன்றைய தினம் பெருமாள் குடும்பத்தினர் இறந்து போன களஞ்சியம் அவரது உடலை வாங்க மறுத்து மூன்று நாட்களாக போராட்டம் செய்தனர். ஆனால் மணப்பாறை DSP பிருந்தா உள்ளிட்ட அதிகாரிகள் பெருமாள் குடும்பத்தினரிடம் IAS அழகர் சாமி குடும்பத்தினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்கிறோம் நீங்கள் உடலை பெற்றுக்கொள்ளுங்கள் என வாக்குறுதி அளித்ததன் பேரில் பிரேத பரிசோதனை செய்த உடலை பெற்று அடக்கம் செய்தனர். ஆனால் இதனால் வரை குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவில்லை. நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சின்னக் காளை அவர்களையும் அவரது சகோதரர் பெருமாள் அவர்களும் தொடர்ந்து காவல் அதிகாரிகளை சந்தித்து இது குறித்து

நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். இன்னிலையில் களஞ்சியம் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருவதால் தங்களுக்கு பாதகம் ஏற்படும் என்ற எண்ணத்தில் IAS அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னக்காளையை நேரில் பலமுறை இவ்விசயத்தில் தலையிடாதே என்று மிரட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 01.03.2022 அன்று ஊர் கிராம கூட்டத்தில் சின்னக்காளை சாதி பெயர் சொல்லி திட்டி தரையில் உட்காரச்சொல்லி அவமானப்படுத்தி செருப்பை கொண்டு மூஞ்சியில் வீசியும் செல்போனை பிடிங்கி தரையில் அடித்து உதைத்தும் அருகில் இருந்த உருட்டுக்கட்டைகளை கொண்டு அழகர் சாமி, தங்கராஜு, ராமகிருஷ்ணன், சுப்பையா ஆகிய நால்வரும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவரது உடலில் பலத்த காயமுற்று இரத்தம் வழிந்தோடியது. அத்தோடு துவரங்குறிச்சி காவல்

நிலையம் சென்று புகார் கொடுத்த போது புகாரினை காவல் துறையினர் வாங்க மறுத்துள்ளனர். அதன் பிறகு தன் உயிரை காப்பாற்றி கொள்ள அரசு பொது மருத்துவமனை சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை வந்த காவல் அதிகாரியிடம் வாய் மொழியாக புகார் கொடுத்தார். அதனை அதிகார் எழுதி கொண்டு சின்னக் காளையிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டார். அதில் எழுதி உள்ளதை சின்னக் காளையிடம் படித்துக் காண்பிக்கவில்லை. மேலும் வெற்றுக் காகிதத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டார். அதன் பின் துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்கு எண் 41/2022 U/S 294 (B) 324, 427, 355, 506 (1) 1 PC என்கிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு உயர் அதிகாரிகளின்

தலையீட்டால் உண்மை நிலையை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது தீண்டாமை வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேலும் கோபமுற்ற IAS அழகர் சாமி மற்றும் அவரது வகையராக்கள் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னக்காளை மீது தாக்குதல் நடத்த முயற்சித்துக் கொண்டுள்ளனர். பொருளாதாரத்திலும், சாதியிலும் பலமாகவுள்ளதால் மேற்கண்ட எதிரிகளால் சின்னக்காளை உயிருக்கு ஆபத்து நேரிடலாம். எனவே நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னக்காளைக்கு உடனடியாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.