“மேயர் மு.அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்” 27 மனுக்கள் பெறப்பட்டன!
திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 27 கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். இந்த கோரிக்கை மனுக்களில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சாலை மேம்பாடு, சொத்துவரி பெயர் மாற்றம், பாதாளசாக்கடை இணைப்பு, சாலையோரகடைகள் ஆக்கிரமிப்புகள், ரேசன்கடை உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்

பாதாளசாக்கடை இணைப்பு உடனடியாக வழங்கவும், பொதுமக்களிடம் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முழுமையான நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்று அலுவலர்களுக்கு மேயர் தெரிவித்தார். மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், துணை மேயர் ஜி.திவ்யா, துணை ஆணையர் எம்.தயாநிதி, மண்டலத்தலைவர் துர்காதேவி, உதவி ஆணையர்கள் ச.நா.சண்முகம், எஸ்.திருஞானம், அ.அக்பர்அலி, செல்வபாலாஜி மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.