காளீசன் இளஞ்செழியனுக்கு ஆள் உயர மாலை அணிவித்து பாராட்டு

0 255
Stalin trichy visit

உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழு தேர்வு துபாயில் கடந்த 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை நடந்தது. இதில் உலக கராத்தே சம்மேளனத்தில் உறுப்பினர்களாக உள்ள 178 நாடுகளை சேர்ந்த நடுவர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். செய்முறை மற்றும் எழுத்துத்தேர்வு மூலம் நடந்த இந்த தேர்வில் 18 பேர் கொண்ட குழு நடுவர்களை தேர்வு செய்தது.

இதில் திருச்சியை சேர்ந்த நடுவர் காளீசன் இளஞ்செழியனை, தென்னிந்தியாவின் முதல் நடுவராக, உலக கராத்தே குழு தேர்வு செய்தது. அவருக்கு திருச்சி மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் துபாய் தேர்வில் பங்கேற்க வாய்ப்பளித்த கராத்தே தியாகராஜனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த சென்சாய் முத்துக்குமார், தந்தையும் குருவுமாக திகழ்ந்த மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் இளஞ்செழியன் மற்றும் கராத்தே வீரர்கள் கலந்து கொண்டு காளீசன் இளஞ்செழியனுக்கு ஆள் உயர மாலை அணிவித்து பாராட்டி வாழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.