தா.பேட்டையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

0 311
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் திட்டம், உதவி திட்ட அலுவலர் செல்வகணபதி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மனோகரன், குணசேகரன், மாவட்ட முன்னோடி

 

வங்கி திறன் பயிற்சி பயிற்றுனர் தமிழ்வாணி ஆகியோர் வேலைவாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினர். திமுக நிர்வாகி பிரபாகரன் முகாமின் நோக்கம் குறித்து வாழ்த்தி பேசினார். முகாமில் 10க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றது. இதில் 214 நபர்கள் கலந்து கொண்டதில் 103 பேர் பல்வேறு நிறுவனங்களில் பணி புரிவதற்காக தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில் வாழ்வாதார திட்ட வட்டார ஒருங் கிணைப்பாளர் செல்லபாப்பா நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.