திருச்சி குண்டூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் செல்வம்(வயது 50). பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியில் குட்ஷெட்யார்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். துக்க நிகழ்ச்சிக்காக சமயபுரம் சென்று விட்டு வந்த செல்வம், சக தொழிலாளியான விஜயன் மற்றும் சிலருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். உணவு பார்சல்
வாங்கி வந்து இருவரும் சாப்பிடாமல் வைத்துவிட்டு துாங்கிவிட்டனர். 11 மணியளவில் விழித்த விஜயன் பார்சலை பிரித்து சாப்பிட்டுவிட்டார். நள்ளிரவு 12 மணியளவில் விழித்த செல்வம் சாப்பாடு இல்லாததால் விஜயனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது செல்வத்தை விஜயன் மரக்கட்டையால் தலையில் அடித்தார். இதில் செல்வம் மயங்கி விழுந்து இறந்தார். இச்சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய விஜயனை தேடி வருகின்றனர்.