தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; நாளை நடக்கிறது!

0 298
Stalin trichy visit

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை (ஏப்.1ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த 18 வயது முதல் 35

வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். தங்களது அனைத்து கல்வி சான்றி தழ்களின் நகல், சுயவிப ரக்குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.