கள்ளக்காதலியின் தாயை தாக்கிய காதலன் சிறையில் அடைப்பு!

0 313
Stalin trichy visit

திருச்சி உறையூர் டாக்கர் ரோட்டை சேர்ந்தவர் சுசீலாதேவி(வயது 37). திருமணமான இவருக்கும் உறையூர் சாலை ரோட்டை சேர்ந்த கண்ணன்(வயது 43) என்பவருக்கிடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த சுசீலாதேவியின் தாய் மகளை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி சுசீலாதேவி, உறையூர் தியாகராஜன் நகர் பள்ளிவாசல் தெருவில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது சுசீலாதேவியை தேடி சென்ற கண்ணன்,

அவர் தாய் வீட்டில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். அப்போது கண்ணனை சுசீலாதேவியின் தாய் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண் ணன், சுசீலாதேவியின் தாயை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சுசீலாதேவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த உறையூர் போலீசார் கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.