திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…
திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. அந்த முகாமை திருநாவுக்கரசர் தொடக்கி வைத்த பணி ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியுள்ளது. எவ்வளவு பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. இன்று திருச்சியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு நான் அங்கு செல்லவில்லை. அதனால் கர்நாடகா சென்று துணை முதலமைச்சர் சிவக்குமார் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அப்பொழுது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது குறித்தும் கோரிக்கை வைத்தேன். காவிரி விவகாரம் என்பது வெறும் கோரிக்கை வைத்தால் மட்டும் நிறைவேறக்கூடிய விவகாரம் கிடையாது, மாறாக சட்ட ரீதியாக மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார்.