விநாயகர் சதுர்த்திக்கு தடையை மீறி ஊர்வலம்; திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் சூடம் ஏற்றி வழிபாடு!

0 464
Stalin trichy visit

விநாயகர் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழக அரசானது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி கட்சியினர் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி வெக்காளியம்மன் கோவில் முன்பாக இந்து முன்னணி கட்சியினர் சார்பாக சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

மேலும் விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி ஊர்வலம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய….https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.