எல்ஐசி பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!
எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் ஒன்றிய அரசுக்கு எதிராக காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். ஐசீஇயூ துணைத்தலைவர் ஜோன்ஸ், காப்பீட்டு கழக ஊழியர் சங்க துணைத்தலைவர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.