கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு குளிர் கண்ணாடி வழங்கல்

திருச்சி மாநகர ரோந்து மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடையை எதிர்கொள்ளும் வகையில் குளிர் கண் கண்ணாடி வழங்கப்பட்டது
திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், கோடை காலத்தில் காவல் ஆளிநர்களின் உடன்நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
அதன்படி, நேற்று(25.05.23)-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைம் அருகில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய “தாகம் தணிப்போம்” என்ற நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் ரோந்து காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என 150 காவல் ஆளிநர்களுக்கு குளிர் கண் கண்ணாடி (Sun Glasses)-யை திருச்சி மாநகர காவல் ஆணையர் வழங்கினார்கள்.


click the image to chat on whatsapp
பின்னர் மாநகர காவல் ஆணையர் கூறுகையில்,, திருச்சி மாநகரில் பணிபுரியும் ரோந்து மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் இரவு, பகல் என்று பாராமல் சுட்டெரிக்கும் வெயிலிலும் திருச்சி மாநகர மக்களின் நலனுக்காக போக்குவரத்து சீர் செய்தல், குற்றதடுப்பு பணிபுரிதல், பாதுகாப்பு பணிபுரிதல் மற்றும் பொதுமக்களின் அவசர தொலைபேசி அழைப்புகளுக்கு உடனுக்குடன் சென்று பிரச்சனைகளை தீர்த்து வைத்தல் போன்ற கடினமான பணி செய்து உழைப்பதாகவும், அவ்வாறு பணிபுரியும் ரோந்து காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களின் உடல் நலனை பேணிகாக்கும் வகையிலும் ஏற்கனவே நீர்மோர், இளநீர் மற்றும் பழச்சாறுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல் நலத்தின் மீது அக்கறை கொண்டு சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்கும் நோக்கில் இந்த குளிர் கண் கண்ணாடி (Cooling Glasses) வழங்கப்பட்டுள்ளது எனவும், மேலும் திருச்சி மாநகர பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துக்கொண்டார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் காவல்துணை ஆணையர் (வடக்கு) அவர்கள், ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆணையர் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.