வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து ஐந்தாம் திருநாள்
திருச்சி, ஜன.4 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து ஐந்தாம் திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் – மாந்துளிர் நிற பட்டு அணிந்து சௌரிக் கொண்டை அணிந்து: அதில் கலிங்கத்துராய்; நெற்றி சரம், சூர்ய- சூர்ய வில்லை சாற்றி, மகர கர்ண பத்திரம்; ரத்தின அபய ஹஸ்தம்- தொங்கல் பதக்கம்;ரத்தின கடி அஸ்தம் (இடது திருக்கை), திரு மார்பில் ஆபரணங்களுகே ஏற்றம் தரும் -ஸ்ரீ ரங்க விமான பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 18 பிடி (6 வட) முத்து சரம் , காசு மாலை; அரைச் சலங்கை;
பின்புறம் – புஜ கீர்த்தி ; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; காசு மாலையும் தழைந்து வரும் படி சாற்றி ; கையில் தாயத்து சரங்கள்;
தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து அணிந்து சேவை சாதித்தார்..👇👇