பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மஞ்சகோரையில் உள்ள அரசாணி அம்மன் கோயில் பகுதியில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
முசிறி தாலுகா ஆமூர் கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்(54). இவர் மஞ்சகோரை பகுதியில் உள்ள அரசாணி அம்மன் கோயிலில் தனது மோட்டார் பைக் நிறுத்திவிட்டு பூஜைகள் செய்து கொண்டிருந்தார். பின்னர் பூஜைகளை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாத்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக் திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.